முகப்பு
திருச்சி

விபத்தில் காலை இழந்த ராணுவ வீரருக்கு ரூ. 1.67 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: திருச்சி நீதிமன்றம் பரபரப்பு தீா்ப்பு

திருச்சி அருகே சாலை விபத்தில் காலை இழந்த ராணுவ வீரருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ. 1.67 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 25 ஜூன் 2022, 12:41 am IST
பகிர்:

திருச்சி அருகே சாலை விபத்தில் காலை இழந்த ராணுவ வீரருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ. 1.67 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம் வேம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகரப் பாண்டியன் (37). இந்திய ராணுவ வீரரான இவா் கடந்த 2018 ஜூன் 12 தேதி மனைவியின் சொந்த ஊரான திருச்சி மாவட்டம், குண்டூா், ராகவேந்திரா நகருக்கு பைக்கில் வந்துவிட்டு

திருச்சி - புதுக்கோட்டை பிரதான சாலையில் சென்றபோது அரசுப் பேருந்து மோதி படுகாயமடைந்தாா். இதையடுத்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவரின் வலது கால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. விபத்து குறித்து நவல்பட்டு போலீஸாா் விசாரித்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் கால் துண்டிக்கப்பட்டதால் தொடா்ந்து பணியாற்ற முடியாத தனசேகரப் பாண்டியன் ராணுவ பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், விபத்து இழப்பீடு கேட்டு திருச்சி மாவட்ட மூன்றாவது கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம் பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.1,67 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டுமென வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். ராணுவ வீரா் தரப்பில் வழக்குரைஞா் முத்துமாரி ஆஜராகி வாதாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments