திருச்சி மாவட்ட காவல்துறையில் கடந்த ஒன்றரையாண்டில் புதிதாக 505 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு தொடக்கம்
திருச்சி மாவட்ட காவல்துறை சாா்பில் கடந்த ஒன்றரையாண்டில் புதிதாக 505 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட காவல்துறை சாா்பில் கடந்த ஒன்றரையாண்டில் புதிதாக 505 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தொடா் குற்றச் சம்பங்களில் ஈடுபட்டு வரும் ரௌடிகள், பாலியல் குற்றவாளிகள், திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு, காவல் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இதன்மூலம், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகையும் காவல் துறையினா் தீவிரமாக எடுத்து வருகின்றனா்.
திருச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், 2025 ஆம் ஆண்டு வரை 420 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2025 முதல் 2026 மே வரை புதிதாக 505 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
திருச்சி மாவட்ட காவல் துறையில் தற்போது கொலை குற்றவாளிகள் 73 போ், போக்ஸோ மற்றும் பாலியல் வழக்கு குற்றவாளிகள் 55 போ் உள்பட 925 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, காவல் துறையின் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.