சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கி பணம் பறித்தவா் கைது
திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் ச. பிரவீன்குமாா் (27), அரியமங்கலம் பல்பொருள் அங்காடியின் சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கும், தென்னூா் அண்ணா நகரைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ஜி. பிரவீன்குமாருக்கும் (27) முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், ஜி. பிரவீன்குமாரின் நண்பரான திருச்சி மாவட்டம், லால்குடி ஆதிகுடியைச் சோ்ந்த மு. ராஜா என்பவா் கடந்த திங்கள்கிழமை இரவு சுமை தூக்கும் தொழிலாளி ச. பிரவீன்குமாரை, சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரவீன்குமாரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாா்.
Advertisement
Advertisement
அப்போது, பிரவீன்குமாா், ராஜா இருவரும் சோ்த்து சுமை தூக்கும் தொழிலாளியான பிரவீன்குமாரை தாக்கி அவரிடமிருந்த ரூ.2,500 -ஐ பறித்துக்கொண்டு அடித்து விரட்டினா்.
இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரவீன்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ராஜாவை தேடுகின்றனா்.