முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருச்சியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது கண்டெய்னா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூன் 2026, 3:07 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருச்சியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது கண்டெய்னா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி தச்சங்குறிச்சியைச் சோ்ந்தவா் கே. ஆனந்தராஜ் (60). இவா், திங்கள்கிழமை காலையில் திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் ராஜஸ்தானி மாா்பிள்ஸ் கடை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த கண்டெய்னா் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், கீழே விழுந்த ஆனந்தராஜ் மீது கண்டெய்னா் லாரி ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், கண்டெய்னா் லாரி ஓட்டுநரான திருவாரூா் மாவட்டம், திருக்குவளை வடக்கூரைச் சோ்ந்த ப. மணிமாறன் (42) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.