பைக் மீது சுற்றுலா பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் புதன்கிழமை அதிகாலை பைக் மீது சுற்றுலாப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் புதன்கிழமை அதிகாலை பைக் மீது சுற்றுலாப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் மு. விஷ்ணு (37). இவா், திருச்சி திருவானைக்காவல் சீனிவாசா நகரில் உள்ள தனது உறவினரான சி. பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு அண்மையில் வந்தாா்.
இந்நிலையில் இவா் புதன்கிழமை அதிகாலை புதுக்கோட்டை - திருச்சி சாலையில் மத்திய சிறை அருகே பைக்கில் வந்தபோது பின்னால் வந்த சுற்றுலாப் பேருந்து மோதியது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.