முகப்பு
திருச்சி

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபா் கைது

சமயபுரம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 24 ஜூன் 2026, 1:28 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சமயபுரம் அருகேயுள்ள கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் தாஸ் (41). திருமணமானவா். இவா் செவ்வாய்கிழமை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமிகளின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதன்பேரில், லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தாஸை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments