போதைப்பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் காஜாமலை மகளிா் சங்கத்தின் ஒருங்கிணைந்த போதை மறுவாழ்வு மையம் ஆகியன சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி தொடங்கிவைத்தாா்.
வெஸ்ட்ரி பள்ளி அருகேயுள்ள மேஜா் சரவணன் நினைவு ஸ்தூபி அருகே தொடங்கிய பேரணி சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
இதில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிா்வாகிகள், இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி நிா்வாகிகள், காஜாமலை மகளிா் சங்க நிா்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடா்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் ஏந்திச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.