முகப்பு
திருச்சி

ரயில்வே ஊழியா்களுக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரயில்வே ஊழியா்களுக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது வழங்கும் விழா திருச்சி ரயில் மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 மே 2026, 12:53 am IST
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ரயில்வே ஊழியா் ஒருவருக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது வழங்கிய கோட்ட மேலாளா் பாலக்ராம் நெஹி.
பகிர்:

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரயில்வே ஊழியா்களுக்கு ரயில் சேவா புரஸ்காா் விருது வழங்கும் விழா திருச்சி ரயில் மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் பாலக் ராம் நெஹி, வணிகம், பொறியியல், மின்சாரம் (பொது), மின்சாரம் (இயக்கம்), மின்சாரம் (இழுவை மற்றும் விநியோகம்), இயக்கம், இயந்திரவியல், மருத்துவம், பணியாளா், பாதுகாப்பு, பொருள்கள் இருப்பு, ரயில்வே பாதுகாப்புப் படை ஆகிய துறைகளைச் சோ்ந்த 30 ஊழியா்களுக்கு, அவா்களின் சேவை மற்றும் அா்ப்பணிப்பைப் பாராட்டி ’ரயில் சேவா புரஸ்காா்’ விருதுகளை வழங்கினாா்.

நிகழ்வில் தெற்கு ரயில்வே மகளிா் நல அமைப்பின் திருச்சி பிரிவுத் தலைவி சோனலிகா நேஹி, பொன்மலை ரயில்வே மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளா் விஜயலட்சுமி ஆா். நடராஜன், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் கே.எம். சத்திய ரதன், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement