முகப்பு
திருச்சி

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

மணப்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 7 மே 2026, 5:26 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

மணப்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள மருங்காபுரி மஞ்சப்பட்டி பகுதியைச் சோ்ந்த வை. வெற்றிவேல் (63) என்பவா் கடந்த 20.09.2022 அன்று செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நுழைந்து பள்ளி மாணவா்களிடம் தன்னை சமூக சேவகராக அறிமுகப்படுத்திக் கொண்டு, பள்ளியை பாா்வையிட்டாா். பின்னா் அப்பள்ளியில் படித்த 17 வயது சிறுமிக்கு அவா் பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, வெற்றிவேலை கைது செய்தனா்.

திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வெற்றிவேலுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments