விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அரசு பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க கோரிக்கை
மாநகராட்சியில் விரிவாக்கப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்
மாநகராட்சியில் விரிவாக்கப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் (வார்டு 91) கோரிக்கை விடுத்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அவர், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களின் நலன் கருதி அரசுப் பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு மாநகராட்சியின் நலத்திட்டங்கள் சென்றடையும் என்றார்.