முகப்பு
சென்னை

பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடவசதி: பெற்றோர்களிடம் நாளை கருத்துக்கேட்பு

தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்குவதற்கான குறைந்தபட்ச இடவசதி தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகிகள்,

Updated On : 22 மே 2013, 4:31 am IST
பகிர்:

தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்குவதற்கான குறைந்தபட்ச இடவசதி தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிய சென்னையில் வியாழக்கிழமை (மே 23) கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள வித்யோதயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாநாட்டுக் கூடத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடவசதி தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைப்பதற்காக வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வல்லுநர் குழுக் கூட்டம் மே 17-ல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கருத்துக் கேட்பு கூட்டம் மே 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

சென்னை, வேலூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் உள்ள பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்படும்.

இந்தக் கூட்டத்தில் தனியார் பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள், பள்ளி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு வகுப்புகளுடன் செயல்படும் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட வேண்டிய குறைந்தபட்ச நில அளவு மற்றும் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

அதேபோல், குறைந்தபட்ச இடவசதி தொடர்பாக ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்ள்ஸ்ரீட்ர்ர்ப்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அந்த இயக்குநரகம் அறிவித்துள்ளது.

போதிய இடவசதி இல்லாததால் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இருக்கக் கூடாது. எனவே, இந்தப் பள்ளிகள் தொடர்பாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

இப்போது, இந்தக் குழு பொதுமக்கள் கருத்துக்களைக் கேட்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.