முகப்பு
சென்னை

கார் மோதி சிறுவன் பலியான வழக்கு: 2 பேருக்கு ஜாமீன்

சென்னையில் நள்ளிரவில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் காரை ஓட்டியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Updated On : 22 ஜூன் 2013, 4:13 am IST
பகிர்:

சென்னையில் நள்ளிரவில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் காரை ஓட்டியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த மே 23-ஆம் தேதி நள்ளிரவு அதிவேகமாகவும், தாறுமாறாகவும் ஓடிய ஒரு கார் எழும்பூர் பாந்தியன் சாலையில் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் மீது மோதியது. அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறி எம்பீ குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜி மற்றும் அவரது நண்பர்கள் குமார், அனில் ராவ், சயீது அன்வர் ஆகிய 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து அவர்களை கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீன் கோரி அனில் ராவ், சயீது அன்வர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Advertisement

Advertisement

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.ராஜேந்திரன், மனுதாரர்கள் இருவரும் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.