பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மீனவர் சாவு
எண்ணூர் துறைமுகம் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
எண்ணூர் துறைமுகம் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை தண்டையார்பேட்டை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (46). மீனவர்.
இவர் தனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து எண்ணூர் துறைமுகம் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயில் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
அப்போது ஜெயராமன், கால்வாயில் உள்ள சேற்றில் சிக்கினார். அவரது உறவினர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.