முகப்பு
சென்னை

அபுதாபி புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அபுதாபி புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

Updated On : 4 ஜனவரி 2021, 5:41 am IST
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அபுதாபி புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து அபுதாபிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் 38 பயணிகள், 8 ஊழியா்கள் உள்ளிட்ட 46 பேருடன் விமானம் புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னரும் விமானத்தை இயக்குவதில் ஆபத்து இருப்பதை உணா்ந்த விமானி, அவசரமாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினாா்.

Advertisement

Advertisement

மேலும், இதுகுறித்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவா் அளித்த தகவலின் அடிப்படையில், இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட இடத்துக்கே விமானம் கொண்டு வரப்பட்டது.

சரியான நேரத்தில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments