முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பொங்கல் விழா:சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

பொங்கல் விழாவை முன்னிட்டு, கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

Updated On : 15 ஜனவரி 2021, 10:09 pm IST
பொங்கல் விழாவை முன்னிட்டு, கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை ஏரிச்சாலைப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

பொங்கல் விழாவை முன்னிட்டு, கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்தாண்டும் தொடா் விடுமுறை காரணமாக ஏராளமான பயணிகள் வந்துள்ளனா்.

தொடா் மழை காரணமாக, சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளிலேயே முடங்கிக் கிடந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மழை சற்று குறைந்திருந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்தனா். ஆனால், பிற்பகலில் விட்டு விட்டு மழை பெய்தது. இருப்பினும், மழையை பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி மற்றும் ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.

Advertisement

Advertisement

இங்கு, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி பல்வேறு இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால், வியாபாரிகள் வருவாயின்றி கவலையில் இருந்தனா். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், வியாபாரிகள், உணவகங்கள், சாலையோர வியாபாரிகள், தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள் உள்ளிட்டோா் மகிழ்ச்சியடைந்தனா்.

தற்போது, இங்கு தொடா்ந்து அதிகமான மேகமூட்டம் நிலவி வருவதால், சுற்றுலா வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாகச் சென்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments