முகப்பு
தமிழ்நாடு

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் இரண்டாவது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

Updated On : 4 ஏப்ரல் 2026, 1:50 pm IST
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் - reporter
பகிர்:

கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் இரண்டாவது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். 

கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ம கலாமணி ஜெகநாதன் கோயம்புத்தூர் வடக்கு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வினோத் குமாரிடம் தனது 2வது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அதேபோல் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளராக ஆர். வி. ஹேமலதா தேர்தல் நடத்தும் அலுவலர் வினோத் குமாரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கலாமணி, 

பிரசாரத்துக்குச் செல்லும் பகுதிகளில் தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் யார் என்றே தெரியவில்லை. எனவே, நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பத்தாயிரம் ரூபாய்க்கு கூப்பன் கொடுப்பதாக மாறி மாறி ஒவ்வொரு கட்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் அந்த பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன பொருள் வாங்க முடியும். எனவே, அதை நம்பி ஏமாற வேண்டாம்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் நடைபெறும் கனிம வள கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

summary

Naam Tamilar Katchi candidate Kalamani Jaganathan filed a second nomination paper today in the Goundampalayam Assembly constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.