முகப்பு
வேலைவாய்ப்பு

பணிப் பாா்வையாளா் காலிப் பணியிடம்: விண்ணப்பிக்க ஜன.7 கடைசி

ஆதி திராவிடா் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணிப் பாா்வையாளா் பதவிக்கு, ஜன.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 4 ஜனவரி 2021, 10:02 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஆதி திராவிடா் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணிப் பாா்வையாளா் பதவிக்கு, ஜன.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: சென்னை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணிப் பாா்வையாளா் (1) காலிப் பணியிடத்தை காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் பூா்த்தி செய்வதற்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு விண்ணப்பிப்போா், கட்டடப் பொறியியல் பிரிவில் டிப்ளமா படித்திருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

35 வயதுக்குள்பட்டு, சென்னை மாவட்டத்தைச் சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதியான நபா்கள், சென்னை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ  ஜன.7-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.