விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் புராஜெக்ட் பணிகள்!
சென்னையிலுள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
சென்னையிலுள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுபற்றிய விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : NIOT/E & P/02/2026 (PROJECT)
Advertisement
Advertisement
பணியின் பெயர்: Project Engineer - I
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,000
தகுதி: Civil Engineering, Ocean Engineering,Structural Engineering,Coastal Engineering,Port & Harbour Engineering, Geoinformatics, Geomatics B.E. / B.Tech. 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Engineering Associate
காலியிடம்: 1
வயது: 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ..42.000
தகுதி: Marine Biology, Marine Science-இல் 60% மதிப்பெண்களுடன் முது நிலைப்பட்டம் தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Associate - 11
காலியிடம்: 1 (UR)
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: Computer Science, Data Science, Information Technology, Artificial Intelligence,Software Systems, Informatics பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Associate - 1
காலியிடங்கள்: 3
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ. 31,000
தகுதி, Electronics & Communication,Electronics & Instrumentation பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் Zoology,Marine Science பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Engineering Assistant
காலியிடம் : 1
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 20.000
தகுதி: Electronics & Communication, Electronics & Instrumentation பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: ProjectAd-ministration Assistant
காலியிடங்கள்: 3 (UR)
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.niot.res.in/recruit mentdetails.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து தேர்வில் கலந்து கொள்ளவும்.
தேர்வு நடைபெறும் நாள் : 6.7.2026 முதல் 10.7.2026
தேர்வு நடைபெறும் இடம்: National Institute of Ocean Technology, NIOT Campus, Velachery - Tambaram Main Road, Chennai-600 100.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.