பருவத்தே பயிர்செய்...
பருவத்தில் பயிர்செய் பழமொழி பருவத்தில் பயிர்செய்தால் விதைக்கும்
பருவத்தில் பயிர்செய் பழமொழி
பருவத்தில் பயிர்செய்தால் விதைக்கும்
உருவத்தில் சிறிய விதைகள்
Advertisement
Advertisement
பருத்தகாய் பழமாய் பயன் தருமே!
-
துள்ளி விளையாடும் சிறுவர்களின்
பள்ளிப் பருவம் துவக்கத்தில்
அள்ளி அணைத்த பெற்றோர்
தள்ளி விடுவர் பள்ளியில்..!
-
கள்ளம் இல்லா சிறுவர்கள்
கவனமாய்ப் படித்து பளிச்சிடுவர்
உள்ளமும் உடலும் இணைய
விளையாட்டில் வீரனாய் திகழ்வர்!
-
விளையும் பயிர் முளையிலே என்பதை
விழையும் தொழில்முனை வோராய்
வளையம் இட்டாலும் வானைத்
தொட்டு வாகை சூடுவர்!
-மு.அ.அபுல் அமீன், நாகூர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.