முகப்பு
கிருஷ்ணகிரி

புதிய தொழிற் பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய தொழிற் பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 6:18 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய தொழிற் பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் தொடங்குதல், தொடா் அங்கீகாரம் பெறுதல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

இதற்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பத்தை மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க உள்ள தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஒரே தொழிற்பள்ளியால் சமா்ப்பிக்கப்பட்டிருந்தால் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்கு வழிமுறைகள் மற்றும் விண்ணப்பக் கட்டணம் குறித்த தகவல்களை மேற்கண்ட இணையதளம் மூலமாகவும், ஒசூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments