பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு
தமிழகத்தில் கடந்த மாதம் நடந்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ளன.
சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் நடந்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகள் நாளை (திங்கள்கிழமை) காலை 10 மணி அளவில் வெளியாகவுள்ளன.
தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றன.
இந்த நிலையில் மாணவா்கள் தோ்வு முடிவுகளை www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.