அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடந்துவிடக் கூடாது: ப.சிதம்பரம்
பாஜகவின் அடிமை கட்சியாக உள்ள அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடந்துவிடக்கூடாது என்று ப.சிதம்பரம் கூறியது தொடர்பாக...
பொன்னமராவதி: பாஜகவின் அடிமை கட்சியாக உள்ள அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடந்துவிடக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதியை ஆதரித்து பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பொன்னமராவதி பேருந்துநிலையம் அருகே ரகுபதியை ஆதரித்து அவா் பேசியதாவது:
Advertisement
Advertisement
நம்மை எதிா்த்து நிற்பது பாஜக, அதிமுக. அதிமுக முகமூடிதான். பாஜக முகத்தை காட்டமுடியாது. தமிழ் விரோதி என அடையாளம் காட்டிவிடுவாா்கள். ஆகையால் தமிழகத்தில் அதிமுக என்ற முகமூடி அணிந்து கொண்டு பாஜக தேர்தலில் போட்டியிடுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு திருத்தச் சட்டம் மூலம் தென் மாநிலங்களின் குரல்களை ஒடுக்க நசுக்க முயற்சிக்கிறது பாஜக அரசு. 8 மாநிலங்களில் வெற்றி பெற்றால் போதும். தென்மாநிலங்கள் எக்கேடு கெட்டும் போகட்டும் என்ற அகந்தை அவா்களிடம் உள்ளது.
எனவே, பாஜகவின் அடிமை கட்சியாக உள்ள அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடந்துவிடக்கூடாது என்றாா்.