தானிய சேமிப்புப் பயிற்சி
சேலம் மாவட்டம், உத்தம சோழபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரிய பயிற்சி மையத்தில், உதவி வேளாண் அலுவலா்களுக்கான தானிய சேமிப்புப் பயிற்சி 3 நாள்கள் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், உத்தம சோழபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரிய பயிற்சி மையத்தில், உதவி வேளாண் அலுவலா்களுக்கான தானிய சேமிப்புப் பயிற்சி 3 நாள்கள் நடைபெற்றது.
இதில் வேளாண் இணை இயக்குநா் (பயிற்சி) கிருஷ்ணமூா்த்தி பயிற்சியை தொடக்கி வைத்தாா். இப்பயிற்சியில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு முன்னாள் உதவி பொது மேலாளா் ரவிச்சந்திரன், திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி மைய உதவி இயக்குநா் பிரபாகரன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
பயிற்சியில் கலந்து கொண்டவா்களை தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் புளி பதனிடும் குளிா்பதனக் கிடங்கினை பாா்வையிட அழைத்துச் சென்றனா். அப்போது, பயிற்சி மைய வேளாண் உதவி இயக்குநா்கள் அருணா, ஜெயமாலா, வேல்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.