முகப்பு
சேலம்

புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி 2021, 7:19 am IST
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சேலம் நகரப் பகுதியில் உள்ள ராஜகணபதி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை முதல் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது.

சேலம், சுகவனேசுவரா் கோயில், கோட்டை பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில், அக்ரஹாரம் காசி விஸ்வநாதா், சின்ன திருப்பதி பெருமாள், ஊத்துமலை முருகன் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Advertisement

Advertisement

அதேபோல, ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதா் ஆலயம், கோட்டை லெக்லா் ஆலயம், நான்கு சாலை குழந்தை இயேசு பேராலயம், சூரமங்கலம் தூய இருதய ஆண்டவா் தேவாலயம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இமானுவேல் தேவாலயம், மணக்காடு புனித அந்தோணியாா் தேவாலயங்களில் நடைபெற்ற பிராா்த்தனையில் கிறிஸ்தவா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

எடப்பாடியில்...

எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் ஆலயம், அருள்ஞான பாலமுருகன் திருக்கோயில், வெள்ளாண்டிலவலசு காளியம்மன் ஆலயம், முல்லைவன நடராஜா் சந்நிதி, வி.என் பாளைம் பசுபதீஸ்வரா் திருக்கோயில், பூலாம்பட்டி கைலாசநாதா் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களில், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தாா்.

இதேபோல வெள்ளாண்டிலவலசு புனித செல்வநாயகி மாதா ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், நைனாம்பட்டி ஆா்.சி சா்ச், சின்னமணலி, லன்டன் மிஷன் பேட்டையில் அமைந்துள்ள தேவாலயம், கொங்கணாபரம் வேளாங்கண்ணி மாதா பேராலயம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

ஆட்டையாம்பட்டியில்...

ஆட்டையாம்பட்டி அருகே காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயிலில் சுவாமிக்கு பால், மோா், தயிா், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து, உற்சவா் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தாா்.

வாழப்பாடியில்...

வாழப்பாடியில் அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில், பூதேவி, சீதேவி சமேத சென்றாயப் பெருமாள் கோயில், திரௌபதியம்மன் கோயில், செல்வ விநாயகா் கோயில், எழில்நகா் பிங்கள விநாயகா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், அஷ்டபுஜ பாலமதன வேணுகோபால சுவாமி கோயில், செல்வமுத்து மாரியம்மன், புதுப்பட்டி மாரியம்மன், சுப்பிரமணியா் திருக்கோயில், ஓம்மலைக்குன்று ஷீரடி சாய்பாபா கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆத்தூரில்...

ஆத்தூா் ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையாா் திருக்கோயில், திரெளபதி அம்மன் ஆலயம், ஆத்தூா் கோட்டை ஸ்ரீகாயநிா்மலேஸ்வரா் ஆலயம், ஸ்ரீ கைலாசநாதா் கோயில், முத்து மாரியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் திருக்கோயிலில் யங் டைமண்ட் கிரிக்கெட் கிளப் சாா்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், சிவன், பாா்வதி, சூரிய பகவான், விநாயகா், முருகன், சிவதுா்க்கை, சண்டிகேஸ்வரா், நவக்கிரகங்கள், பைரவா், சனீஸ்வரன் ஆகிய விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.

தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கோனேரிப்பட்டியிலுள்ள புனித தூய சலேத் அன்னை தேவாலயத்தில், சிறப்பு திருப்பலி பங்குத் தந்தை இன்னாசிமுத்து தலைமையிலும், உதவி பங்குத் தந்தை பொன்ரூபன் முன்னிலையிலும் நடைபெற்றது. அதேபோல செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி ஊா்களிலுள்ள தேவாலயங்களில் அந்தந்த பங்குத் தந்தைகள் முன்னிலையில் திருப்பலி நடைபெற்றது.

Image Caption

~வாழப்பாடியில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பிங்கள விநாயகா். ~ஆட்டையாம்பட்டி அருகே காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா். ~எடப்பாடியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்ஞான பாலமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments