முகப்பு
சேலம்

ஓமலூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் இன்று தொடங்கி வைத்தார்.

Updated On : 4 ஜனவரி 2021, 3:11 pm IST
ஓமலூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை துவைக்கி வைத்த எம்எல்ஏ வெற்றிவேல்.
பகிர்:

ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்சசிக்கு கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். 

இதேபோன்று ஓமலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தளபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் ஓமலூர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தொகுப்பு வழங்கும் பணியினை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.எஸ்.கே.ஆர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் பச்சனம்பட்டி பெரமச்சர் முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்கியது. 

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் சரவணன் ஓமலூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் திருமுருகன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணைத்தலைவர் சிவகுமார் அதிமுக மாணவர் அணி பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.