முகப்பு
விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டம்: இலங்கை 333 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது.

Updated On : 1 ஜூன் 2013, 10:50 pm IST
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. அதை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, இலங்கையை பேட் செய்ய அழைத்தது.

Advertisement

Advertisement

அந்த அணியில் குஷல் பெரேராவும், தில்ஷானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி இந்தியா தரப்பில் பந்துவீசிய 7 பெüலர்களையும் பந்தாடியது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 35.1 ஓவர்களில் 209 ரன்கள் குவித்தனர்.

தில்ஷான் 78 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், பெரேரா 94 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 82 ரன்களும் எடுத்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினர்.

இதன்பிறகு வந்த குமார் சங்ககாரா 32 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 45, ஜெயவர்த்தனா 30, சன்டிமால் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசிக் கட்டத்தில் திசாரா பெரேரா 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் சேர்க்க அந்த அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது.

இந்தியா 192/4: பின்னர் ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவன் 1 ரன்னிலும், முரளி விஜய் 18, ரோஹித் சர்மா 5 ரன்களிலும் ஆட்டமிழக்க 12.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதன்பிறகு கோலியுடன் இணைந்தார் ரெய்னா. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 19-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது இந்தியா. ரெய்னா 31 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கோலியுடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். இந்த ஜோடி அதிரடியாக விளையாட இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

இந்திய அணி 32.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 77, தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments