முகப்பு
விளையாட்டு

பிரெஞ்சு ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஷரபோவா, அசரென்கா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மரியா ஷரபோவா, பெலாரஸின் விக்டோரியா அசரென்கா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Updated On : 1 ஜூன் 2013, 10:50 pm IST
பகிர்:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மரியா ஷரபோவா, பெலாரஸின் விக்டோரியா அசரென்கா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் இப்போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 3-வது சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா 6-1, 7-5 என்ற நேர் செட்களில் சீனாவின் ùஸங்கையும், பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் அலைஸ் கார்னெட்டையும் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

இதேபோல் அமெரிக்காவின் ஸ்டீபன்ஸ் 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் எரகோவிக்கையும், அமெரிக்காவின் பெத்தானியே மடேக் சேன்ட்ஸ் 4-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் ஆர்மெஸியாவையும் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர். இதேபோல் இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோனேவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அவர் தனது 3-வது சுற்றில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் மரியோன் பர்டோலியை வீழ்த்தினார்.

Advertisement

Advertisement

நிஷிகோரி வெற்றி: ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் ஜப்பானின் நிஷிகோரி 6-3, 6-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பெனாய்ட் பேரை வீழ்த்தினார்.

பயஸ் ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஆஸ்திரியாவின் ஜூர்கன் மெல்ஸர் ஜோடி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்த ஜோடி 7-5, 4-6, 6-7 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் இல்லாத உருகுவேயின் பப்லோ கியூவாஸ்-ஆர்ஜென்டீனாவின் ஹொராசிகோ ùஸபாலஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது.

இதேபோல் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பெலாரஸின் மேக்ஸ் மிர்ன்யி-ருமேனியாவின் ஹரியா டீக்கா ஜோடி 6-4, 6-7, 5-7 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் மைக்கேல் லோட்ரா-மஹத் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments