முகப்பு
விளையாட்டு

காலிறுதியில் செளம்யஜித், தேசாய் ஜோடி

ஜப்பான் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ்-ஹர்மீத் தேசாய் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

Updated On : 22 ஜூன், 2013 at 12:23 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

ஜப்பான் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ்-ஹர்மீத் தேசாய் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

ஜப்பானின் யோகோஹமா நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடி 11-8, 2-11, 11-6, 9-11, 11-9 என்ற செட் கணக்கில் ஸ்வீடனின் கிறிஸ்டியான் கார்ல்சன்-மத்தியாஸ் கார்ல்சன் ஜோடியை வீழ்த்தியது.

இந்திய ஜோடி தங்களின் காலிறுதியில் ஜப்பானின் ஜினுய்டா-யோஷிமுரா ஜோடியை சந்திக்கிறது. முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல் 7-11, 20-18, 5-11, 11-8, 11-6, 11-2 என்ற செட் கணக்கில் சீனதைபேவின் சியா-ஷெங் லீயை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Advertisement

மற்றொரு 2-வது சுற்றில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ் 11-9, 3-11, 12-14, 4-11, 4-11 என்ற செட் கணக்கில் சீனதைபேவின் சியன்-அன் ஷென்னிடம் தோல்வி கண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.