முகப்பு
விளையாட்டு

விம்பிள்டன்: முதல் சுற்றில் பயஸ், எர்லிக் ஜோடிகள் மோதல்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி, தங்களின் முதல் சுற்றில் இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிக்-இத்தாலியின் டேனிலே பிரேசியாலி ஜோடியை சந்திக்கிறது.

Updated On : 22 ஜூன், 2013 at 12:33 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி, தங்களின் முதல் சுற்றில் இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிக்-இத்தாலியின் டேனிலே பிரேசியாலி ஜோடியை சந்திக்கிறது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி வரும் திங்கள்கிழமை லண்டனில் தொடங்குகிறது.

இந்த நிலையில் இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் யார், யாருடன் மோதுவது என்பதை குலுக்கல் முறையில் (டிரா) தேர்வு செய்துள்ளனர். அதன்படி முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்கும் இந்தியாவின் திவிஜ் சரண்-பூரவ் ராஜா ஜோடி, தங்களின் முதல் சுற்றில் அமெரிக்காவின் நிகோலஸ் மன்றோ-ஜெர்மனியின் சைமன் ஸ்டட்லர் ஜோடியை சந்திக்கிறது.

Advertisement

முதல் சுற்றில் திவிஜ்-ராஜா ஜோடி வெற்றி பெறும் பட்சத்தில், 2-வது சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ஆஸ்திரியாவின் ஜூலியன் நோவ்லே ஜோடியை சந்திக்க வாய்ப்புள்ளது. பூபதி-நோவ்லே ஜோடி, தங்களின் முதல் சுற்றில் ஆர்ஜென்டீனாவின் லியோனார்டோ மேயர்-ஸ்பெயினின் ஆல்பர்ட் ரேமோஸ் ஜோடியுடன் மோதுகிறது.

இதேபோல் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பிரான்ஸின் ரோஜர் வேஸலின் ஜோடி, தங்களின் முதல் சுற்றில் ஃபின்லாந்தின் ஜார்க்கோ நிமினியன்-ரஷியாவின் டிமிட்ரி ஜோடியை சந்திக்கிறது.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-அமெரிக்காவின் லீùஸல் ஹியூபர் ஜோடி, தங்களின் முதல் சுற்றில் செக்.குடியரசின் ரெனட்டா வொரகோவா-கிளாரா ஜோடியுடன் மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.