முகப்பு
விளையாட்டு

347 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

அனைத்து துறையிலும் வலுவான அணியாகத் திகழும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் 347 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படு தோல்வியடைந்தது.

Updated On : 22 ஜூலை 2013, 1:49 am IST
பகிர்:

அனைத்து துறையிலும் வலுவான அணியாகத் திகழும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் 347 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படு தோல்வியடைந்தது.

583 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-வது இன்னிங்ûஸத் தொடங்கிய ஆஸ்திரேலியா 90.3 ஓவர்களில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லண்டனில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 361 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 128 ரன்களும் எடுத்தன.

233 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ûஸத் தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 333 ரன்கள் எடுத்திருந்தது. ரூட் 178 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Advertisement

Advertisement

ரூட் 180: 4-ம் நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பேர்ஸ்டோவ் 11 ரன்களுடனும், ரூட் 180 ரன்களுடனும் வெளியேறினர். ரூட் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கேப்டன் குக் அறிவித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களாக இருந்தது.

583 ரன்கள் இலக்கு: இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இங்கிலாந்து 582 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 583 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

போட்டி முடிய இரு நாள்களுக்கும் குறைவாக இருந்த நிலையில், ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கத்துடன் ஆஸ்திரேலிய வீரர்கள் களம் இறங்கினர். ஆனால் தொடக்க வீரர் வாட்சனை 20 ரன்களிலேயே வெளியேற்றி, ஆஸ்திரேலியாவின் சரிவைத் தொடங்கி வைத்தார் ஆண்டர்சன்.

இதை முறையாகப் பயன்படுத்திய ஸ்வான், ரோஜர்ûஸ 6 ரன்களிலும், ஹியூûஸ 1 ரன்னிலும் வெளியேற்றினார். அப்போது அணியின் ஸ்கோர் 36.

க்வாஜா, கிளார்க் போராட்டம்: அணியின் சரிவைத் தடுக்க க்வாஜாவும், கிளார்க்கும் கடுமையாகப் போராடினர். ஒவ்வொரு பந்தையும் கவனமாகவே எதிர்கொண்டனர். இதனால், அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்ததுடன், விக்கெட் வீழ்ச்சியும் தடுத்து நிறுத்தப்பட்டது.

ரூட் அசத்தல்: நீண்ட நேரம் விளையாடி வந்த கிளார்க்-க்வாஜா பாட்னர்ஷிப்பை பிரித்த ரூட், இருவரையும் வெளியேற்றி இங்கிலாந்து அணியை மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தார். கிளார்க் 51 ரன்களிலும், க்வாஜா 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 192 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி விக்கெட்டாக பட்டின்சனும், ஹாரிசும் ஜோடி சேர்ந்தனர். தோல்வி உறுதி என்று தெரிந்ததைத் தொடர்ந்து இந்த ஜோடி எவ்வித பதற்றமுமின்றி ஆடியது. அதனால், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. 9-வது விக்கெட்டுக்குப் பிறகு, சுமார் 14 ஓவர்கள் முடிந்த பிறகு இங்கிலாந்தின் வெற்றி உறுதியானது.

நீண்ட நேரம் சோதனை அளித்த பட்டின்சனை (91 பந்துகளில் 35 ரன்கள்) வீழ்த்தி வெற்றியை 4-வது நாளிலேயே உறுதி செய்தார் ஸ்வான். இந்த இன்னிங்ஸில் அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் 9 விக்கெட்டுகளை தன் வசப்படுத்தினார்.

ஆஷஸ் தொடரில் தற்போது 2-0 என்ற முன்னிலையில் இங்கிலாந்து முன்னணி வகிக்கிறது. முன்னதாக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 3-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

சுருக்கமான ஸ்கோர்

முதல் இன்னிங்ஸ்:

இங்கிலாந்து- 361

ஆஸ்திரேலியா- 128

2-வது இன்னிங்ஸ்:

இங்கிலாந்து- 349/7 டிக்ளேர் (ரூட் 180, பெல் 74, சிடில் 3வி/65)

வெற்றி இலக்கு 583

ஆஸ்திரேலியா- 235

(க்வாஜா 54, கிளார்க் 51, ஸ்வான் 4வி/78)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.