துராந்த் கோப்பை கால்பந்து: ஓஎன்ஜிசி, கடற்படை அணிகள் வெற்றி
துராந்த் கால்பந்து கோப்பை போட்டியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன.
துராந்த் கால்பந்து கோப்பை போட்டியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன.
தில்லியில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் 126-வது துராந்த் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஓஎன்ஜிசி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ராணுவ ரெட் அணியை வீழ்த்தியது.
Advertisement
Advertisement
ஓஎன்ஜிசி அணியைச் சேர்ந்த அசிம் ஹசன் 2 கோல்களையும், ஹென்றி எஸஸ் மற்றும் பர்வீந்தர் சிங் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 2-0 என்ற கணக்கில் இந்திய விமானப் படை அணியை வீழ்த்தியது. கடற்படை தரப்பில் பி.ரியாத்தும், ரமன் ராயும் தலா ஒரு கோல் அடித்தனர்.