முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இப்போது முடியுமா?

சர்.ஏ.ராமசாமியும், சத்தியமூர்த்தியும் சென்னை மத்திய சட்டசபைத் தேர்தலுக்குப் போட்டியிட்டனர்.

Updated On : 21 மார்ச் 2013, 5:04 pm IST
பகிர்:

சர்.ஏ.ராமசாமியும், சத்தியமூர்த்தியும் சென்னை மத்திய சட்டசபைத் தேர்தலுக்குப் போட்டியிட்டனர். ராமசாமி ஜஸ்டிஸ் கட்சி சார்பாகவும், சத்தியமூர்த்தி காங்கிரஸ் கட்சி சார்பாகவும் போட்டியிட்டனர். ஒருமுறை தேர்தல் பிரசாரத்தின்போது இருவரும் நேரில் சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் கை குலுக்கிக் கொண்டு தேர்தல் நிலவரம் குறித்து பேசிக் கொண்டார்கள்.

""நிலவரம் எப்படி இருக்கிறது?'' ராமசாமி கேட்டார்.

""உங்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறது வாழ்த்துகள்!'' என்றார் சத்தியமூர்த்தி

Advertisement

Advertisement

""இல்லை...இல்லை...உங்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வாழ்த்துகள்''என்றார் ராமசாமி.

"நன்றி' என்று சொல்லிவிட்டு இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரசாரத்திற்குச் சென்றுவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.