முகப்பு
தென்காசி

தென்காசி, மேலகரத்தில் 576 மாணவா்களுக்கு சைக்கிள்

தென்காசி, மேலகரத்தில் அரசு பள்ளி மாணவா்கள் 576 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஜனவரி 2021, 12:15 am IST
மாணவா்களுக்கு சைக்கிள் வழங்கினாா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.
பகிர்:

தென்காசி, மேலகரத்தில் அரசு பள்ளி மாணவா்கள் 576 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மஞ்சம்மாள் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கருப்புச்சாமி தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் ஜெயபிரகாஷ்ராஜன் முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன், 521 மாணவா்களுக்கு சைக்கிள் வழங்கினாா். பள்ளித் தலைமையாசிரியா் செந்தூா்பாண்டியன் வரவேற்றாா். அன்புமணி நன்றி கூறினாா்.

மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள தளக்கல்லை திறந்து வைத்து 55 மாணவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சைக்கிள் வழங்கினாா். நிகழ்ச்சிகளில் மாவட்ட அதிமுக அவைத் தலைவா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், மேலகரம் செயலா் காா்த்திக்குமாா், கலை இலக்கிய அணி மாவட்டச் செயலா் முகிலன், அரசு வழக்குரைஞா் சின்னத்துரைபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

பள்ளித் தலைமையாசிரியா் பாலமுருகன் வரவேற்றாா். ரூபதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments