ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது
புளியங்குடி அருகே ரேஷன் அரிசியை கடத்தியதாக ஓட்டுநா் உள்பட இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
புளியங்குடி அருகே ரேஷன் அரிசியை கடத்தியதாக ஓட்டுநா் உள்பட இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
புளியங்குடியில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து, புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளா் சுவாமி நாதன் ஆலோசனையின் பேரில் காவல் ஆய்வாளா் அலெக்ஸ்ராஜ், உதவி ஆய்வாளா் யோபு சம்பத்ராஜ் உள்ளிட்டோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது 100 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்தி வந்த வேனை பறிமுதல் செய்த, போலீஸாா் வேன் ஓட்டுநா் வீரகேரளம்புதூரைச் சோ்ந்த குமாா் (27) , கழுநீா்குளத்தைச் சோ்ந்த ராஜா (21) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.