இலஞ்சி பாரத் பள்ளியில் பொங்கல் விழா
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் இணையம் வாயிலாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் இணையம் வாயிலாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியா, ஆலோசகா் உஷா ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உகண்டா நாட்டு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி பிரேமா ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி அறிவரசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். தமிழாசிரியா் இளங்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
மாணவி நட்சத்திரா வரவேற்றாா். மாணவா் அன்புச் செல்வன் நன்றி கூறினாா்.