ஐஎஸ்எஸ்எல் நிறுவனத்தை இன்டஸ்இண்ட் கையகப்படுத்த ரிசர்வ் வங்கி ஒப்புதல்
நிதி சேவைத் துறையைச் சேர்ந்த ஐஎல்&எஃப்எஸ் செக்யூரிட்டீஸ் சர்வீஸஸ் (ஐஎஸ்எஸ்எல்) நிறுவனத்தை, தனியார் வங்கியான இன்டஸ்இண்ட் கையகப்படுத்துவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல்
நிதி சேவைத் துறையைச் சேர்ந்த ஐஎல்&எஃப்எஸ் செக்யூரிட்டீஸ் சர்வீஸஸ் (ஐஎஸ்எஸ்எல்) நிறுவனத்தை, தனியார் வங்கியான இன்டஸ்இண்ட் கையகப்படுத்துவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனமான இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீஸிங் அண்டு ஃபைனான்ஷியல் சர்வீஸஸின் (ஐஎல்&எஃப்எஸ்) துணை நிறுவனமான ஐஎஸ்எஸ்எல் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்க, இன்டஸ்இண்ட் வங்கி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த நிலையில், இதுதொடர்பான பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக இன்டஸ்இண்ட் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.