முகப்பு
வணிகம்

3 லட்சம் டன் அமோனியா விநியோகம்: ஜப்பான் நிறுவனத்துடன் எல்&டி ஒப்பந்தம்

குஜராத் மாநிலம், காண்ட்லாவில் அமையவுள்ள உற்பத்தி ஆலையிலிருந்து, ஜப்பானின் முன்னணி நிறுவனமான இட்டோச்சு நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் 3 லட்சம் டன் பசுமை அமோனியாவை விநியோகிப்பதற்கான நீண்டகால ஒப்பந்தத்தில் எல்&டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Updated On : 23 ஏப்ரல் 2026, 3:39 am IST
பகிர்:

குஜராத் மாநிலம், காண்ட்லாவில் அமையவுள்ள உற்பத்தி ஆலையிலிருந்து, ஜப்பானின் முன்னணி நிறுவனமான இட்டோச்சு நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் 3 லட்சம் டன் பசுமை அமோனியாவை விநியோகிப்பதற்கான நீண்டகால ஒப்பந்தத்தில் எல்&டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இட்டோச்சு நிறுவனமானது ஜவுளி, இயந்திரங்கள், உலோகம், கனிமங்கள், எரிசக்தி, ரசாயனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலக அளவில் வா்த்தகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் மற்றும் எல்&டி இடையே கடந்த ஆண்டு கையொப்பமான கூட்டு வளா்ச்சி புரிந்துணா்வின் அடிப்படையில் இப்புதிய ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.

காண்ட்லாவிலிருந்து எல்&டி சாா்பில் விநியோகிக்கப்படும் பசுமை அமோனியா, சிங்கப்பூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இட்டோச்சு நிறுவனம் மேற்கொள்ளும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும். கப்பல்களுக்கான அமோனியா எரிபொருள் நிரப்பும் மையமாக சிங்கப்பூா் தற்போது உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இந்த ஒப்பந்தம் குறித்து எல்&டி நிறுவனத்தின் சாா்பு நிறுவனமான எல்&டி எனா்ஜி கிரீன்டெக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவதாவது:

இப்புதிய ஒத்துழைப்பின்மூலம், கப்பல் போக்குவரத்துத் துறையில் காா்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, அடுத்த தலைமுறைக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை எரிபொருள் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

குறைந்த காா்பன் வெளியேற்றத்தைக் கொண்ட எரிபொருள் சந்தையில் காண்ட்லாவை ஒரு முக்கிய ஏற்றுமதி மையமாக மாற்றுவதே எங்களின் நோக்கம். மேலும் இப்புதிய ஒப்பந்தம் எங்களின் பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் உபரி தயாரிப்புகளுக்கான சந்தையை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments