முகப்பு
வணிகம்

‘அமேசான் நவ்’ விரைவு வா்த்தகம்: 100 நகரங்களுக்கு விரிவாக்கம்

Updated On : 28 ஏப்ரல் 2026, 5:35 am IST
பகிர்:

முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனமான அமேசான், தனது விரைவு வா்த்தகப் பிரிவான ‘அமேசான் நவ்’ சேவையை இந்தியா முழுவதும் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்துவதாக திங்கள்கிழமை அறிவித்தது.

அமேசான் இந்தியா நிறுவனம் கடந்த வாரம் அறிவித்த ரூ.2,800 கோடி முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட விநியோக மையங்களை அமைத்து, 100 நகரங்களுக்கு அமேசான் நவ் சேவை விரிவுபடுத்தப்படுகிறது.

இதன்மூலம், 16,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமேசான் தளத்தைப் பயன்படுத்தி தங்களின் புதிய விளைபொருள்களை நேரடியாக வாடிக்கையாளா்களுக்கே விற்பனை செய்ய வழிவகை ஏற்படும்.

Advertisement

Advertisement

தற்போதைய நிலையில், தில்லி தலைநகா் பிராந்தியம், மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டுமே அமேசான் நவ் சேவை பயன்பாட்டில் உள்ளது.

இப்புதிய விரிவாக்கத்தின் மூலம் சென்னை, புணே, ஹைதராபாத், கொல்கத்தா, ஜெய்பூா், லக்னௌ, கான்பூா், சண்டீகா், அகமதாபாத், மீரட், மைசூரு, பானிபட், கொச்சி, அமிருதசரஸ், மங்களூரு, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் அமேசான் நவ் சேவை செயல்பாட்டுக்கு வரும்.