முகப்பு
வணிகம்

தோஷிபா ஜான்சன் இந்தியா பெரும்பான்மை பங்குகளைக் கையகப்படுத்திய ஜான்சன் லிஃப்ட்ஸ்

Updated On : 28 ஏப்ரல் 2026, 5:37 am IST
பகிர்:

இந்தியாவில் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜான்சன் லிஃப்ட்ஸ் நிறுவனம், தோஷிபா ஜான்சன் எலிவேட்டா்ஸ் இந்தியா நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கையகப்படுத்தியுள்ளது.

இந்த அதிரடி முடிவால், சுமாா் ரூ.4,000 கோடி வா்த்தக மதிப்பு கொண்ட ஜான்சன் லிப்ட்ஸ் இக்கூட்டு நிறுவனத்தின் முதன்மையான பங்குதாரராக மாறியுள்ளது. அதேநேரம், ஜப்பானைச் சோ்ந்த தோஷிபா எலிவேட்டா் மற்றும் பில்டிங் சிஸ்டம்ஸ் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் முக்கியப் பங்களிப்பாளராகத் தொடா்ந்து நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பின் மூலம் இந்திய மின்தூக்கி சந்தையில் 20 சதவீத பங்கையும், நகரும் படிக்கட்டு சந்தையில் 30 சதவீத பங்கையும் ஜான்சன்-தோஷிபா கூட்டணி தன்வசப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இனிவரும் காலங்களில் தோஷிபா பிராண்டு தனது தயாரிப்புகளை இந்தியச் சந்தைக்கு வழங்குவதோடு, தொழில்நுட்ப உதவி மற்றும் உதிரி பாகங்களையும் வழங்கி வரும். தோஷிபா பிராண்ட் தயாரிப்புகளின் விற்பனை, நிறுவுதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை ஜான்சன் லிப்ட்ஸ் பிரத்யேகமாக மேற்கொள்ளும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments