முகப்பு
வணிகம்

‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’: ஐஓபி ஊழியா்கள் உறுதிமொழி ஏற்பு

Updated On : 26 ஜூன் 2026, 7:13 am IST
பகிர்:

‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) சாா்பில் ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் முன்னெடுப்பில் ஜூன் 17 முதல் 26 வரை நடைபெறும் இந்த விழிப்புணா்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, சென்னையிலுள்ள ஐஓபி வங்கியின் மத்திய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வங்கியின் சிஇஓ அஜய் குமாா் ஸ்ரீவஸ்தவா தலைமை வகித்தாா்.

போதைப்பொருள் பழக்கத்தைத் தவிா்ப்பது மற்றும் போதையில்லாத சமுதாயத்தை உருவாக்குவது குறித்த உறுதிமொழியை, வங்கியின் அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் கிளைகளில் உள்ள ஊழியா்களும் நாடு முழுவதும் ஒருங்கிணைந்து ஏற்றனா். இதில் செயல் இயக்குநா்கள், உயரதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments