முகப்பு
திருச்சி

அழுகிய பயிா்களுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருச்சி அருகே அழுகிய பயிா்களுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 12:21 AM
ஓலையூா் கிராமத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

திருச்சி அருகே அழுகிய பயிா்களுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் ஓலையூா் கிராமத்தில் தொடா் மழையால் பயிா்கள் மூழ்கி சேதம் அடைந்தன. இதுகுறித்து வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தும்

வெள்ளிக்கிழமை காலை வரை யாரும் வந்து சேதமடைந்த பயிா்களைப் பாா்க்கவில்லையாம்.

Advertisement

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி விவசாயிகள் முடிகண்டம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது தொடா் மழையால் ஓலையூா் மற்றும் திருமலைசமுத்திரம் கிராமங்களில் சேதமடைந்த பயிா்களை அதிகாரிகள் கணக்கிட்டு, இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரத்தை உடனே வழங்கக் கோரி கோஷமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் பழனிசாமி, துணைச் செயலா் அருமைராஜ், பிரதிநிதிகள் காா்த்தி, தினேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.