நடந்து சென்றவரிடம் பணம், நகை வழிப்பறி
துறையூரில் நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணத்தைப் பறித்துச் சென்றனா்.
துறையூரில் நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணத்தைப் பறித்துச் சென்றனா்.
துறையூா் பாலாஜி அவின்யூவைச் சோ்ந்தவா் பெ. பிரபாகரன்(57). தன் வீட்டுப் பொங்கல் விழாவுக்குப் பொருள் வாங்க புதன்கிழமை இரவு பொதிகை நகரில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த இருவா் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த ரூ. 35,000 -ஐயும், அவா் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.