முகப்பு
தினமணி கதிர்

ஏழு ஸ்வரங்களுக்குள்...

வானம் ஒரு பலத்த மழைக்குத் தயாராக இருந்தபோது வாசுதேவன் கோபத்தின் உச்சிக்குப் போயிருந்தார். பாக்யா இன்னும் வேலைக்கு வரவில்லை. வரட்டும்

தினமணி கதிர்

ஏழு ஸ்வரங்களுக்குள்...

வானம் ஒரு பலத்த மழைக்குத் தயாராக இருந்தபோது வாசுதேவன் கோபத்தின் உச்சிக்குப் போயிருந்தார். பாக்யா இன்னும் வேலைக்கு வரவில்லை. வரட்டும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:29 AM
பகிர்:

வானம் ஒரு பலத்த மழைக்குத் தயாராக இருந்தபோது வாசுதேவன் கோபத்தின் உச்சிக்குப் போயிருந்தார். பாக்யா இன்னும் வேலைக்கு வரவில்லை. வரட்டும் அவளிடம் கேட்க வாசுதேவனுக்கு நிறைய கேள்விகள் இருந்தன. மீண்டும் ஒருமுறை வாசலை திரும்பிப் பார்த்துக் கொண்டார். அவள் வரவில்லை. எத்தனை தட்டிக் கொடுத்தும் மனம் கேட்காமல் புலம்ப ஆரம்பித்தது. "என்ன மனிதர்கள் இவர்கள்? எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறோம். இன்னும் என்னதான் வேண்டும் இவர்களுக்கு? நான்தான் உலகம் தெரியாமல் வெளுத்ததெல்லாம் பால் என்று வெகுளியாக இருக்கிறேனா? பாக்யா ஏன் அப்படிச் செய்தாள்? அதைவிட அந்தச் சிறுவன் முருகனுக்குப் பதின்மூன்று வயது இருக்குமா? அவன் எப்படி அப்படியொரு துரோகத்துக்கு துணையாய் இருந்தான்?' விடை தெரியாத கேள்விகளின் குழப்பத்தில் வாசுதேவன் நன்கொடை கேட்டு வந்திருந்த கடிதத்தை எடுத்து சரசரவென கிழித்துப் போட்டார்.

சுசீலா நேற்று கடைவீதிக்குப் போனபோது அந்த உண்மை தெரிந்தது. வழியில் பாக்யாவின் சொந்தக்கார அம்மாவைச் சந்தித்தாள். அந்தம்மா ஏதோ சொல்ல வந்து நிறுத்தின மாதிரி இருந்தது. பொதுவான பேச்சுக்களைத் தொடர்ந்து அந்த அம்மா ""இன்னும் பாக்யா பையன் முருகன் படிக்கிறதுக்கு பணம் தந்துட்டு இருக்கீங்களா?'' என்றாள். சுசீலா ""ஆமாம்'' என்று சொல்ல, ""நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க இனிமேல் அந்த உதவியெல்லாம் அவளுக்குச் செய்யாதீங்க'' என்றாள். அதிர்ச்சியோடு சுசீலா காரணம் கேட்க அவள் சொன்ன பதில் அதை விட அதிர்ச்சியாய் இருந்தது.

""பாக்யா பையன் ஸ்கூலுக்குப் போயே மூணு வருசம் ஆச்சு. அவன் இப்ப ஒரு டூ வீலர் வொர்க் ஷாப்பில வேலை பார்க்கிறான். ஆனா அவ பையன் படிக்கிறான்னு சொல்லி உங்க கிட்ட பணம் வாங்கிட்டிருக்கா... நான் சொன்னன்னு சொல்லாம அவளையே கூப்பிட்டு விசாரிச்சுப் பாருங்க. நீங்க நல்ல மனுசங்களா இருக்கீங்க. அதான் மனசு கேட்காம சொல்லிட்டேன்'' என்றபடி அவள் போக, சுசீலாவுக்கு லேசாய் தலை சுற்றியது. அப்படியே ஓர் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தாள்.

வாசுதேவன் வீட்டுக்கு வர அவரிடம் எல்லாவற்றையும் கொட்டிய பிறகே சுசீலாவுக்கு கொஞ்சம் ஆசுவாசம் வந்தது. வாசுதேவன் அதிர்ச்சியானாலும், ""அந்தம்மா ஏதாவது பொறாமையில சொல்லியிருக்கலாம்'' என்றார். பிறகு ""பாக்யா வந்தால் விசாரித்துப் பார்க்கலாம்'' என்றார். ஆனால் அந்த இரவெல்லாம் வாசுதேவனுக்குச் சரியாகத் தூக்கம் வரவில்லை. தூங்கின நேரத்தில் அந்தச் சிறுவன் முருகன் கனவில் வந்தான். அந்த கபடமற்ற முகம் சட்டென விகாரமாய் மாறி சிரிக்க ஆரம்பிக்க வாசுதேவன் சட்டென எழுந்தார். வியர்த்திருந்தது. எழுந்து போய் தண்ணீர் குடித்தார். சுசீலா கண் விழித்து, ""என்னாச்சு'' என்றாள். ""ஒண்ணுமில்ல'' என்றபடி அவர் மீண்டும் படுக்க தூக்கமே வராமல் அந்த இரவு மிக நீளமாய்க் கழிந்தது.

காலையில் வாசுதேவன் வந்து டைனிங் டேபிளில் வந்த அமர்ந்தபோது சுசீலா சாப்பிட இட்டிலியைத் தயாராய் வைத்தாள். பக்கத்தில் உட்கார்ந்தாள். தன் வருத்தத்தைக் கொஞ்சமும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் சுசீலாவுக்கு ஞாபகப்படுத்த சில விஷயங்கள் இருந்தன.

""இன்னைக்கு தி.நகர் கோயில் ஒன்றில் பத்தரைக்கு உங்க கச்சேரி. மதியம் மூணு மணிக்கு அண்ணாநகர்ல கிளாஸ் இருக்கு. அப்புறம் சாயந்திரம் ஆறரைக்கு  கான சபாவில சாய்ராம் கச்சேரி''

எல்லாம் வாசுதேவனுக்கு நினைவில் இருக்கிறது. ஆனாலும் சுசீலா ஞாபகப்படுத்துவதை முப்பத்தாறு வருடங்களாகத் தன் கடமையாகச் செய்து கொண்டிருக்கிறாள்.

""அப்புறம்''

""ம்.. சொல்லு'' என்றார்.

""அன்னை தெரஸô அனாதை இல்லத்துக்கு நன்கொடை அனுப்பணும்''

""அதையெல்லாம் கிழிச்சுப் போட்டாச்சு. இனி யாருக்கும் உதவி செய்றதா உத்தேசமே இல்ல. செஞ்சவரைக்கும் போதும். எவ்வளவு செஞ்சிருக்கேன். தெரிந்தவன், தெரியாதவன்னு யாரு கேட்டாலும் அள்ளி அள்ளி கொடுக்கல? கொஞ்சங்கூட நன்றி இல்லாத ஜென்மங்கள். பாக்யா வரட்டும் அப்புறம் பாரு'' என்றபடி அவர் எழுந்து கை கழுவப் போனார்.

பாக்யா காலை எட்டு மணிக்கு வழக்கமாய் வேலைக்கு வருவாள். இருவரும் காத்திருந்தார்கள். வருவதற்கான அறிகுறியே இல்லாமல் போக, என்னாச்சு விஷயம் தெரிந்துவிட்டதோ? என்று வாசுதேவன் யோசித்தார். நேரம் போய்க் கொண்டிருந்தது. என்ன மனிதர்கள் என்கிற ஆத்திரம் அவரை இன்னும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. மணியைப் பார்த்தார். ஒன்பதாகியிருந்தது. இனி காத்திருப்பது வீண். பத்து மணிக்குள் தி.நகரில் இருந்தாக வேண்டும். வாசுதேவன் தன் பேக்கை மாட்டிக் கொண்டு மாடியிலிருந்து படியிறங்க ஆரம்பித்திருந்தார். சுசீலா வேகமாய் வழியனுப்ப வந்தாள். வெளியே மழை லேசாய் தொடங்கியிருந்தது. வாசுதேவன் குடைகூட எடுத்துக் கொள்ளவில்லை. அது தவிர இந்த குழப்பத்தில் அவர் நிகழ்ச்சிக்கு போகத்தான் வேண்டுமா என பதட்டமும் வந்தது. கூப்பிட்டால் கோபம் வரும். தூரத்தில் மின்னலொன்று பளீரென அடிக்க அந்த வெளிச்சத்தில் அவர் போவதை சுசீலா பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் எதையும் யோசிக்காமல் தூறலில் நனைந்தபடியே போக சுசீலாவுக்கு  சற்று வருத்தமாக இருந்தது. அளவான உயரம். கொஞ்சம் கூடுதல் உடம்பு. ஆனால் இந்த அறுபத்து நான்கு வயதிலும் கிளாஸ், கச்சேரியென அவரது சுறுசுறுப்பு சுசீலாவுக்கே ஆச்சரியமாய் இருக்கும். ஆனால்  இந்த  வயதில் இந்த அலைச்சல் தேவையா? வீட்டிலிருந்து ஓய்வு எடுக்கக் கூடாதா? என்றால் அவரிடமிருந்து ""இருக்கிறவரையில் நல்ல இசைகளோடு வாழ வேண்டும்'' என்று மட்டும் பதில் வரும்.

தி.நகர்  கோயிலின் உள்ளே அதன் சின்ன அரங்கம். வாசுதேவன் தன் கச்சேரியை ஆரம்பித்திருந்தார். கூட்டம் கணிசமாய் இருந்தது. இன்னும் கொஞ்ச பேர் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். மழை வெளியே பலமாய்ப் பிடித்திருந்தது. ஏழுமலையானை வேண்டிக் கொண்டு வாசுதேவன் பாட ஆரம்பித்தார். "பொடகன்டிமய்யா மிம்மு புருசோத்தமா' என்று அவர் பாடியது அந்த அரங்கம் முழுவதும் தவழ்ந்தது. மோகனராகம். இருந்த கூட்டம் ரசித்துக் கேட்டது. பாதி பாடலில் மனசு பழைய குட்டையில் விழ சுருதி தப்புவதை வாசுதேவன் நன்றாகவே உணர்ந்தார். கூட பாடிக் கொண்டிருந்த அவரது மாணவர்கள் அவருக்கு என்னாச்சு என்கிற மாதிரி பாடியபடியே திரும்பிப் பார்த்தார்கள். அப்படியே சமாளித்து சில பாடல்களைப் பாடியவர் "சாலதா ஹரி நாம செüக்யாம்ருதமு...' வில் குரல் உடைந்து போனார். ஹம்சத்வனி முற்றிலும் தொனி இழந்து போனது. மன்னிக்கச் சொல்லிவிட்டு கச்சேரியைச் சீக்கிரமே முடித்துக் கொண்டார். வெளியே லேசான தூறல் தொடர்ந்து கொண்டிருந்தது.

யோசனைகள் தொடர நனைந்தபடியே வாசுதேவன் நடக்க ஆரம்பித்தார். மீண்டும் பாக்யாவும் அவளது பையனும் ஞாபகத்திற்குள் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். பாக்யா முதல் முதலில் தன் வீட்டுக்கு வந்து வேலை கேட்டது ஞாபகம் வந்தது. வேலை கேட்டு வந்தபோது பாக்யா தன் நிலைமையை முழுவதுமாய்ச் சொன்னாள். அவளது கணவன் வேறொரு பெண்ணோடு வாழ்கிறானாம். அதுமட்டுமில்லாமல், எப்போதாவது வருகிற அவன் குடித்துவிட்டு உதைக்கிறான். தன் குடும்பத்தை சுத்தமாய் கவனிப்பதில்லை என்றாள். பாக்யா சேலை நுனியில் கண்ணீர் வடித்தபடி எல்லாம் சொன்னாள். கேட்ட சுசீலாவுக்கும் கண் கலங்கியது. பைலட் தியேட்டர் பக்கம் ஒரு குறுக்குச் சந்தில் வீடாம்.

ஒரே ஒரு பையன் இருக்கிறான். ஆழ்வார்பேட்டையில் ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிப்பதாகவும் சொன்னாள். அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவள் ஆசையாம்.

வாசுதேவன் தன் வீட்டுக்கும் வேலையாள் தேடிக் கொண்டிருந்ததால், பெரியதாய் யோசிக்காமல் உடனே வேலை தந்தார். அது தவிர அவளுடைய மகனின் படிப்புக்கென ஒவ்வொரு வருடமும் இரண்டாயிரம் ரூபாய் தருவதாகவும் ஒத்துக் கொண்டார். அடுத்த நாளே பையனை வரச் சொன்னார். அவன் வந்தான். பெயர் முருகனாம். நல்ல சுறுசுறுப்பாய் தெரிந்தான். வாசுதேவனுக்கு அவனைப் பார்த்ததுமே உதவ வேண்டுமென தோன்றியது. உடனே பணத்தை தந்தார். அவன் கண்களில் தெரிந்த சந்தோசம் இப்போதும் வாசுதேவனின் மனதில் இருக்கிறது. அவனும் சேர்ந்து இவ்வளவு பெரிய தப்பை எப்படி செய்ய துணிந்தான்? வாசுதேவனால் நம்பவே முடியவில்லை.

நண்பர் கணேஷிடமிருந்து போன் வந்தது. எல்லாம் பகிர்ந்து கொள்கிற நண்பர். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். வாசுதேவன் போனை எடுத்துப் பேசினார்.

""உங்க வீட்டில போன் பண்ணினாங்க. நடந்ததச் சொன்னாங்க. வாசு நான் சொல்றது என்னன்னா நடந்தது நடந்து போச்சு. அதுக்காக நீ இவ்வளவு அப்செட் ஆக வேண்டியது இல்லைன்னு சொல்றேன்''

""நம்ம செய்துட்டே இருக்கணும். அவங்க ஏமாத்திட்டே இருப்பாங்க. எல்லாத்தையும் ஏத்துட்டு ஏமாளியாவே இருக்கச் சொல்றயா?''

""நான் அப்படிச் சொல்லல. உனக்குப் புரியற பாஷையில சொல்றேன். நீ இசையைப் பத்தி தெரிஞ்ச ஆள். ஏழே ஏழு ஸ்வரங்களுக்குள்ள எத்தனை ராகங்கள் இருக்கு. ஒவ்வொரு ராகமும் ஓர் உணர்வைச் சொல்லுது. ஓர் அனுபவத்தைத் தருது. அதில எல்லா ராகமும் ஒரே மாதிரியா இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாரு. உனக்கு இசை வெறுத்துப் போயிடாது? அது மாதிரிதான்டா மனுசங்களும்'' என்று கணேஷ் சொல்லச் சொல்ல அவரது பேச்சைப் பாதியில் நிறுத்தினார் வாசுதேவன்.

""ப்ளீஸ்.... வேண்டாம் போதும். உன்னொட ஆறுதலுக்கு ரொம்ப நன்றி.. ஆனா அவர்களைப் பார்த்து நாக்கப் பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டாலொழிய நான் சமாதானம் ஆகமாட்டேன். போனை வச்சிருட்டா'' என்றபடி போனை வைத்தார்.

ஓர் ஆட்டோ  பிடித்தார் வாசுதேவன். பாக்யாவின் பையன் படிப்பதாகச் சொன்ன பள்ளிக் கூடத்துக்குப் போனார். அங்கே தெரிந்த ஆசிரியரை வைத்து விசாரித்தார். அந்தப் பையனின் பெயரைச் சொன்னார். வகுப்பைச் சொன்னார். காத்திருந்த நொடியில் அப்படி  யாரும் படிக்கவில்லை என்ற தகவல் வர அவர் மேலும் உடைந்து போனார். வெளியே வந்தார். மீண்டும் ஓர் ஆட்டோ பிடித்தார். மீண்டும் யோசனை தொடர்ந்தது. பைலட் தியேட்டர் பக்கம் இறங்கிக் கொண்டார். வீடுகள் நிறைந்த சந்துக்குள் நுழைந்தார். பாக்யாவை விசாரிக்க அவளது வீட்டைக் காட்டினார்கள். மனதுக்குள் கோபம் மீண்டும் ஏறத் தொடங்கியது. அந்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கேட்கக் காத்திருந்த கேள்விகள் சுழன்று ஓடியது. வாசலில் ஒரு பெரியம்மா உட்கார்ந்திருந்தார்கள். பாக்யாவை விசாரிக்க அவள் உடம்பு சரியில்லையென ராயப்பேட்டை ஹாஸ்பிடல் போயிருப்பதாகச் சொன்னாள். ""கொஞ்ச நேரம் இருங்க வந்திருவா'' என்றார். உண்மையிலேயே உடம்பு சரியில்லையா? அப்படிச் சொல்லச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறாளா? வாசுதேவனுக்கு யோசிக்க நேரமில்லை. விடை தெரிந்தாக வேண்டும். பையனைப் பற்றி விசாரித்தார். பீட்டர்ஸ் ரோட்டில் அவன் வேலை செய்யும் வொர்க் ஷாப்பைப் பற்றி அந்தம்மா விவரம் சொன்னார்கள். வாசுதேவனுக்கு இன்னும் வேகம் வந்தது. மீண்டும் ஆட்டோ பயணம்.

 பீட்டர்ஸ் ரோடு குறிப்பிட்ட வொர்க்ஷாப் முன்னால் இறங்கிக் கொண்டார். தன் மனதின் சத்தம் அந்த வொர்க்ஷாப்பின் சத்தத்தைவிட அதிகமாய்க் கேட்பது போலிருந்தது. மெல்ல நடந்தார். ஏதோவொரு பதட்டம் தவிர்க்கவே, முடியாமல் கூடவே வந்தது மெல்ல நடந்தார். ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதர் வரவேற்றார். முதலாளியாய் இருக்க வேண்டும். வாசுதேவன் வந்த விஷயத்தைச் சொன்னார். அவர் முருகனைக் கூப்பிட, முருகன் ஓர் இரண்டு சக்கர வாகனத்தின் பின்புறத்திலிருந்து அடையாளமே தெரியாமல் அழுக்காய் எழுந்தான். வாசுதேவனைப் பார்த்ததும் அவன் முகம் சட்டென மாறியது. ஸ்பேனரைப் போட்டுவிட்டு தயக்கத்தோடு நடந்து வந்தான். அதற்குள் வாசுதேவன் கோபத்தில் உடம்பு சூடாவதை உணர்ந்தார். முருகன் பக்கத்தில் வந்தான்.

""ஐயா நீங்க இங்க?''

அதிர்ச்சியில் அவனுக்கு வார்த்தைகள் தடுமாறின.

""இதுதான் நீ படிக்கிற ஸ்கூலா?''

அவனிடம் பதிலில்லை. பளாரென அவன் கன்னத்தில் வாசுதேவன் ஓர் அறை விட அவன் தடுமாறி நின்றான். ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. கண்களில் கண்ணீர் வந்தது. மெüனமாய் நின்றான். வொர்க்ஷாப் முதலாளி பதட்டமாகி ஓடி வந்து, ""என்ன சார்?''

என்றார். பையனே அவரைத் தடுத்தான். வாசுதேவன் கோபத்தில் கத்த ஆரம்பித்தார்.

""எதுக்குடா உனக்கும் உங்கம்மாவுக்கும் இந்த திருட்டுப்  புத்தி? நல்லதுதானடா செஞ்சேன். இனி யாருக்காவது உதவணும்னு எனக்கு எப்படிடா தோணும்? படிக்கிறேன்னு பொய் சொல்லி கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம எப்படிடா பணம் வாங்க முடிஞ்சுது? இப்பவே இந்தப் புத்தின்னா  நீ எதிர்காலத்தில என்னென்ன பண்ணுவேன்னு நினைச்சாலே பயமா இருக்குது'' என்றபடி அவனது சட்டைப் பிடித்து உலுக்க அவன் நிமிராமல் தொடர்ந்து கண்ணீரோடு நின்றிருந்தான்.

""உங்கம்மாவ நம்பிக்கையா வீட்டுக்குள்ள விட்டுத்தான வயசான நானும் என் பொண்டாட்டியும் வாழ்ந்துட்டு இருக்கோம். பணத்துக்காக உங்கம்மா எங்களைக் கொலை கூட செய்யமாட்டான்னு என்னடா நிச்சயம்?''

""ஐயா அப்படி சொல்லாதீங்க''

""என்னடா அப்படி சொல்லாதீங்க?''

""எங்கம்மா மேல எந்தத் தப்பும் இல்லீங்க. எங்கம்மா ரொம்ப நல்லவங்க. அவங்க அப்படியெல்லாம் செய்யாதடா பாவம்னு ஆரம்பத்திலேயே சொன்னாங்க. நாந்தாங்கய்யா கேட்கல''

""என்னடா கேட்கல?''

""எங்கம்மா என்னை நல்லா படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டாங்க. ஆனா எனக்குத்தான் சுட்டுப் போட்டாலும் படிப்பு வரலைங்கய்யா.... அதுதான் வேலை கத்துக்கலாம்னு இங்க வந்துட்டேன். ஆனா என்னோட நண்பன் சரவணன் நல்லா படிப்பான். ஆனா அவனப் படிக்க வைக்க அவங்க வீட்ல வசதியில்லீங்கய்யா.... அப்பத்தான் அம்மா நீங்க படிக்க வைக்க பணம் தர்ற விஷயத்தைச் சொன்னாங்க. அவனுக்குன்னு கேட்டா நீங்க பணம் தராமப் போயிடுவிங்களோன்னு எனக்குன்னு பொய் சொல்லிப் பணம் வாங்கி அவனுக்குத் தந்துட்டு இருக்கேங்கய்யா... தப்புதாங்கய்யா.... என்னை மன்னிச்சிடுங்க....'' என்று அழுதபடி முருகன் வாசுதேவனின் காலில் விழப் போக பதட்டமாய் அவனைத் தடுத்து நிறுத்தினார்.

""நீ என்னைவிடப் பெரிய ஆள். என் கால்லயெல்லாம் விழக்கூடாதுப்பா'' என்றார் வாசுதேவன்.

முழு கட்டுரையைப் படிக்க →