கருவறைக்கு காத்திருக்கும் கருவி ஈஸ்வரன்!
மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது கருவி எனஅழைக்கப்படும் கருவிழுந்த நாதபுரம் (கருவித்து நாதபுரம்). இப்புவியில் உயிர்கள் பிறக்க முதல் ஆதாரமான கரு வித்து இங்குதான் விழுந்ததாம்.
மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது கருவி எனஅழைக்கப்படும் கருவிழுந்த நாதபுரம் (கருவித்து நாதபுரம்). இப்புவியில் உயிர்கள் பிறக்க முதல் ஆதாரமான கரு வித்து இங்குதான் விழுந்ததாம்.
அந்நிகழ்வே ஊரின் பெயர்வரக் காரணமாயிற்று என்று கூறப்படுகின்றது. சிருஷ்டி தத்துவத்தை விளக்கும் விதமாக அமைந்து முதல் உலகத்தோற்றத்திற்கு உரித்தான பெருமை பெற்றது இவ்வூர்.
நாகை மாவட்டம், தரங்கம் பாடி வட்டத்தில் இவ்வூரில் உள்ள என். எச் சாலையிலிருந்து சீர்காழி நோக்கி பிரியும் இடத்தில் உள்ள சாலையில் காவேரிக்கரைவரை சென்று அதன் கரை ஓரம் சென்றால் பெரும்புதர் நடுவில் உள்ளது பழைமையான சிவன் கோயில். காலத்தின் கோலத்தால் சிதிலமடைந்த அனைத்து மூர்த்திகளும் தனி ஓட்டுக் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அருவுருவமான லிங்கமூர்த்தி மிக அழகாக பளிங்கு கல்லால் செதுக்கப்பட்டு இப்போது காண்பினும் கண்ணாடியால் செய்ததுபோல் தோற்றமளிக்கின்றார். ஆலய அவல நிலையிலும் அழகாக காட்சியளிக்கின்றான் இந்த ஆண்டவன்! குடமுழக்கு என்பது எந்த நூற்றாண்டில் நடந்தது என்பது கேள்விக்குறி.
புதன் தலம், கேது தலம், செவ்வாய் தலம் என முக்கிய நவக்கிரக ஆலயங்களுக்கு தலயாத்திரை செய்யும் அன்பர்கள் இவ்வூர் வழியாகத் தான் செல்லவேண்டும். அவர்கள் மனது வைத்தால் கூட, அழகான கருவறையில் புகுந்துவிடுவான் இந்தக் கருவி ஈஸ்வரன். அந்த தெய்வீகத் திருப்பணி நடந்திட நாமும் ஒரு கருவியாக இருந்து செயல்படுவோம்.
- ம. கடம்பூர் விஜயன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.