என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

இன்றைய ராசி பலன்கள் (24.11.2026) 12 ராசிகளுக்கும்! இன்று நல்ல நாள்!

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் எனத் தெரிந்துகொள்வோம்.

daily prediction

தினப்பலன்கள்

Updated On :

12 ராசிக்கான ராசிப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

நவம்பர் 24, 2026 (செவ்வாய்க் கிழமை ) 

மேஷம்:

இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு கௌரவம் கிடைக்கும். பொருளாதாரத்தில் சிறப்பு உண்டாகும். தொழிலாளர்கள் சற்று கவனத்துடன் பணியாற்றுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 7

ரிஷபம்:

இன்று லாபமான நாளாக அமையும். மிகவும் நிம்மதியாகவும் திட்டமிட்டும் இன்றைய பணிகளை மேற்கொள்வீர்கள். வீடு, நிலம் போன்றவைகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். பொறியியல், விஞ்ஞானம் போன்ற துறைகளில் உள்ளோருக்கு சிக்கல்கள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

மிதுனம்:

இன்று உங்களுடைய கௌரவம் உயரும். உங்களது முக்கியத்துவம் உணரப்படும். லக்ஷ்மிகரமான வாழ்க்கை அமைய சவுகரியமான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்வீர்கள். சில சிரமங்களுக்கிடையே சில நன்மைகளைச் செய்ய வாய்ப்புண்டு. பயணத்தின்போது எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்:

இன்று பொதுவாக சில சங்கடங்கள் உண்டாகலாம். அதிகப்படியான செலவுக்கு இலக்காகலாம். சிலரால் மனத்தில் தேவையில்லாத பீதி உண்டாகலாம். வீண் அலைச்சல் தவிர்க்க வேண்டுமானால் எதையும் திட்டமிடல் அவசியம். அன்றாடப் பணிகளில் எந்த வித சிக்கல்களும் வராது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

சிம்மம்:

இன்று மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். அதனால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு உத்தமமான லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சிக் குறை ஏற்படாது. அன்றாட பிரச்சனைகளில் எந்தத் தொந்தரவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கன்னி:

இன்று அரசாங்க காரியங்களில் அனுகூலம் ஏற்படும். கற்றறிந்தோர் கௌரவம் ஏற்படும். புகழ் கிடைக்கும் நற்காரியங்களை இந்த நேரத்தில் ஆற்ற இயலும். தம்பதிகளிடத்தில் அன்னியோன்னியம் ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும் சில வீண் செலவுகளும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்:

இன்று பொருளாதார சுபிட்சம் பெருகும். அந்தஸ்து உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆரோக்கியம் ற்புதமாக இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்:

இன்று புத்திசாலித்தனமாக இயங்குவதற்குரிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கல்வியில் சாதனை செய்வதற்குரிய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமை மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

தனுசு:

இன்று உங்களுடைய அந்தஸ்திற்கு சோதனை வரலாம். அதிகப்படியான செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். உங்களுடைய உறுதியும், கொள்கைப் பிடிப்பும் தளர்வதற்குண்டான நிலை வரலாம். எந்த ஒரு காரியமும் தாமதத்திற்க்கு உள்ளாவது தவிர்க்க முடியாமல் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மகரம்:

இன்று சில நன்மைகள் ஏற்பட்டாலும் சிற்சில சங்கடங்களும் ஏற்படலாம். பெரியோர் ஆசீர்வாதங்களும் தெய்வ சிந்தனையும் உங்களை இடரிலிருந்து காக்க உதவும். தொழில் மேன்மை தடைபடாது. வீடு, நிலம் போன்றவற்றில் ஏதேனும் வில்லங்கம் இருந்தால் அதனை சமாதான முறையில் தீர்த்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

கும்பம்:

இன்று பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மீனம்:

இன்று தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டும். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

Today Rasi Palan in Tamil - 24 November 2026 | இன்றைய ராசிபலன் நவம்பர் 24, 2026 | Today Horoscope in Tamil

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.