உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி. அவருக்கு பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் துறை ஏற்றது. அவர் படித்துள்ள துறையிலேயே வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கும் யோகம் உள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குப்பிறகு அவரின் கல்வியில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதி ஐந்தாம் வீட்டிலேயே உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. அவருக்கு புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம், ருசக யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். வெளிநாடு சென்று வசிக்கும் வாய்ப்பும் உண்டு. ஆரோக்கியமும் சீராகவே அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.