/

மகாலட்சுமியை வழிபடவும் 

எனது மகன் பிஇ படித்துள்ளார். வயது 35 ஆகிறது. திருமணமே வேண்டாமென்று கூறுகிறார். தற்காலிகமாக கணினி மூலம் பணியாற்றி வருகிறார். இவருக்கு நல்ல வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடைபெறும்? 

Updated On :5 ஆகஸ்ட் 2020, 12:45 pm


எனது மகன் பிஇ படித்துள்ளார். வயது 35 ஆகிறது. திருமணமே வேண்டாமென்று கூறுகிறார். தற்காலிகமாக கணினி மூலம் பணியாற்றி வருகிறார். இவருக்கு நல்ல வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடைபெறும்? 

வாசகர், புதுச்சேரி.

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்கினாதிபதியும், சுக பாக்கியாதிபதியுமான சூரிய, செவ்வாய் பகவான்கள் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பூர்வபுண்ணிய அஷ்டம ஸ்தானாதிபதியான குரு பகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று ஐந்தாம் பார்வையாக தைரிய தொழில் ஸ்தானாதிபதியான ஆட்சி பெற்றிருக்கும் சுக்கிர பகவானையும், ஏழாம் பார்வையாக அயன ஸ்தானத்தில் உள்ள புத பகவானையும், ஒன்பதாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். அயன ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதும் சிறப்பு.

ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் பலம் பெற்ற சுக்கிர மஹா தசையில் பாக்கியஸ்தானத்தில் (சர ராசியில்) அமர்ந்திருக்கும் ராகு பகவானின் புக்தி நடக்கிறது. அதனால் நல்ல வருமானம் தரும் வேலை உடனடியாக கிடைக்கும். அடுத்த ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.