படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும்!

நான் படித்த பெண். திருமணமாகி உடனுக்குடன் இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. தற்சமயம் வேலைக்குச் செல்ல விரும்புகிறேன்.
Updated on
1 min read


நான் படித்த பெண். திருமணமாகி உடனுக்குடன் இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. தற்சமயம் வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். வேலை கிடைக்குமா அல்லது வீட்டில் இருந்தே ஏதாவது வேலை செய்யலாமா? ஜாதகப்படி எனக்கு இது உகந்த நேரமா? 

வாசகி, சென்னை.

உங்களுக்கு கடக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்கும் புத பகவானுடன் இணைந்திருக்கிறார். ஐந்து, பத்தாம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய் பகவான்களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்று, சனி, சுக்கிர பகவான்களுடன் இணைந்திருக்கிறார். தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் பாக்கியாதிபதி, தனகாரகரான குரு பகவான் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானையும், ஏழாம் பார்வையாக எட்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் தனாதிபதியான சூரிய பகவானையும் (தன காரகர் தனாதிபதியை பார்வை செய்தல்; தனாதிபதி தன ஸ்தானத்தைப் பார்வை செய்தல்), ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். 

தற்சமயம் சுக்கிர மஹா தசை நடக்கத் தொடங்கியிருப்பதால் படிப்புக்கேற்ற வேலை உடனடியாகக் கிடைத்துவிடும். வீட்டிலிருந்தபடியேயும் வேலை செய்து கொடுக்கலாம். மெடிக்கல், டிரான்ஸ்கிரிப்ஷன் துறையும் ஏற்றது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com