திருமணம் கை கூடும்
நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன். அரசு வேலை கிடைக்குமா? எப்பொழுது திருமணம் நடக்கும்? மனதளவில் நொந்து போய்விட்டேன். எப்பொழுது என் வாழ்க்கை சிறப்படையும்?


நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன். அரசு வேலை கிடைக்குமா? எப்பொழுது திருமணம் நடக்கும்? மனதளவில் நொந்து போய்விட்டேன். எப்பொழுது என் வாழ்க்கை சிறப்படையும்?
வாசகி, சிவகாசி.
உங்களுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னாதிபதி சந்திர பகவான் நீச்சம் பெற்று இருந்தாலும் அவர் உச்சம் பெறும் வீட்டுக்குரிய கிரகமான சுக்கிரபகவான் சப்தம கேந்திரத்தில் இருப்பதால் முழுமையான நீச்ச பங்க ராஜ யோகம் உண்டாகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமாக பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் சிம்மாசன யோகம் உண்டாகிறது.
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றமர்ந்து ஐந்தாம் பார்வையாக லக்னத்தையும் அங்கமர்த்திருக்கும் ராகு பகவானையும், ஏழாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், அங்கமர்த்திருக்கும் லக்னாதிபதியான சந்திரபகவானையும் (குருச் சந்திர யோகம்) பார்வை செய்கிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சுக்கிர, கேது பகவான்களுடன் இணைந்து இருக்கிறார்.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்றமர்த்திருக்கிறார். தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் ராகு பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுக்குள் அரசு வேலை மற்றும் அன்னிய உறவில் வரன் அமைந்து திருமணம் கை கூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும். மற்றபடி எதிர்காலம், மணவாழ்க்கை சிறப்பாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...