சமதோஷமுள்ள வரன்
என் இரண்டாம் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? நல்ல வரனாக அமையவேண்டும். உங்களின் ஆலோசனைகளை வேண்டுகிறோம்..!


என் இரண்டாம் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? நல்ல வரனாக அமையவேண்டும். உங்களின் ஆலோசனைகளை வேண்டுகிறோம்..!
வாசகர், சென்னை.
உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னம், அஷ்டமாதிபதியான செவ்வாய் பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பூர்வ புண்ணியாதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் புத பகவானுடன் (புத ஆதித்ய யோகம்) இணைந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவானுடன் இணைந்து இருக்கிறார். கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும், ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். தற்சமயம் குருபகவானின் பார்வையைப் பெற்றிருக்கும் ராகு பகவானின் தசையில் புத பகவானின் புக்தி நடக்கிறது. இன்னும் ஓராண்டுக்குள் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள, படித்த நல்ல வேலையில் உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...